×

4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 4ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று கடைசி நாள். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஆந்திரா – 25, தெலங்கானா – 17 உள்பட 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் மே 13ம் நாள் 4ம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.

மேலும் அன்று ஆந்திராவின் 175 தொகுதிகளும் பேரவை தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 25ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஏப்ரல் 26ம் தேதி மனுக்கள் பரீசிலிக்கப்படும். ஏப்ரல் 29 வரை மனுக்களை திரும்ப பெறலாம். இதைதொடர்ந்து மே 13ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.

The post 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...